தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் சுகாதார செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரியவந்துள்ளது.