Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரம் பாதிப்பு… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு… கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வருமானமின்றி தவித்து வருகின்றார்கள்.

இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அன்றாட செலவுக்கே மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனால் முதலமைச்சர் எங்களை போன்ற தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு நிவாரண தொகை அளிக்க வேண்டுமென தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |