Categories
சினிமா தமிழ் சினிமா

சாந்தனுவின் ‘முருங்கைகாய் சிப்ஸ்’… ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைகாய் சிப்ஸ் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைகாய் சிப்ஸ். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், மனோபாலா, மதுமிதா, ரேஷ்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார் .

Murungakkai Chips Official Trailer- Dinamani

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |