Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 1முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி மதிப்பெண் வழங்குவதில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இது குறித்த புகார்களை பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |