Categories
உலக செய்திகள்

ஈரான் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம்.. கனடா அரசின் சலுகை.. ஏமாற்றமடைந்த பெண்..!!

ஈரானிலிருந்து கனடா சென்ற ஒரு விமானம், கடந்த 2020 ஆம் வருடம் சுடப்பட்ட நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில், ஈரானிலிருந்து கனடா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் கனடா அரசு, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த கனடா மக்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதே விமான விபத்தில் பலியான Mansour Esnaashary Esfahani என்பவரது மனைவி அதனால் தனக்கு பலன் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதாவது அந்த சலுகைக்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதன் படி, கனடாவைச் சேர்ந்த குடிமகன் அல்லது நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள் அந்த விமான விபத்தில் பலியானால், அவர்களது குடும்பத்தினருக்கு தான் நிரந்தர வாழிட உரிமம் அளிக்கப்படுகிறது. எனவே Mansour சர்வதேச மாணவர் தான் என்பதால் அவரது மனைவிக்கு அந்த சலுகை கிடையாது.

கனடா அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த சலுகை நம் அனைவருக்குமே தேவையானது. ஆனால் அரசு, இந்த வகையில் என்னைப் போன்றவர்களை கவனிக்கவில்லை என்று Mansour-ன் மனைவி கூறியிருக்கிறார். அதாவது அந்த விமான விபத்தில் சுமார் 176 பயணிகள் உயிரிழந்தனர். அதில் கனடா மக்கள் 55 பேர் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் உள்ளவர்கள் 30 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |