பிரான்சில் காவல்துறையினர், “பொதுமக்களை காக்கும் எங்களை காக்க சட்டம் வேண்டும்” என்று கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களை காக்கும் காவல்துறையினர், சில சம்பவங்களின் போது கொல்லப்படுகிறார்கள். அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தீவிரவாத தாக்குதலில் ஒருவரும், இளைஞரால் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர்.
எனவே காவல்துறையினர், ஆர்ப்பாட்டங்களை தடுக்க முயற்சிக்கும் போது கற்கள் மற்றும் பட்டாசுகள் தங்கள் மீது வீசப்படுவதால் ஆத்திரமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும் எங்களை பாதுகாப்பதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் “சேவை செய்வதற்காகத்தான் சம்பளம் பெறுகிறோம், சாவதற்காக இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்றுள்ளார்கள். அதில் காவல்துறையினர் “தங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை சிறையில் அடைக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
மேலும் காவல்துறையினரை கொலை செய்பவர்களுக்கு குறைந்தது முப்பது வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.