இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் 2 மணிவரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும் சில முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் இன்றும், மே 23ஆம் தேதியும் சில சேவைகள் செயல்படாது என எஸ்பிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இன்று இரவு 10.45 – நள்ளிரவு 1.15 வரை, மே 23 நள்ளிரவு 2.40 – காலை 6.10 வரை இன்டர்நெட் பேங்கிங் , யோனோ, யோனோ லைட், யுபிஐ உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது. பராமரிப்பு பணி காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.