Categories
மாநில செய்திகள்

BREAKING: முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தவர் நிலோபர் கபில். இவர் தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவினர் அவருடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |