வாழ்க்கையில் வெறுப்படைந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கோபால் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கால் வலி மற்றும் கால் எரிச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்தவித பலனும் அளிக்காததால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.