பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் இறந்தபின்பு, அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகி தன் மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதிலிருந்து தன் குடும்பத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் தற்போது வரை பிரிட்டன் மக்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் இதுபோன்று பேசியதை பார்த்திருக்கவில்லை.
எனவே மக்கள் பலரும் மேகன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் தாயார் காலமான பின்பு தன் தந்தை, வளர்த்தது பற்றி இளவரசர் ஹரி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தாய் இறந்த பின்பு துக்கத்திலிருந்து மீண்டு வர தனக்கு தகுந்த அவகாசம் தரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் போதை மருந்துகள் மற்றும் மதுவை நாடி, அப்படியாவது துக்கத்திலிருந்து மீண்டு வர மாட்டோமா? என்று அதற்கு தான் அடிமையானதாக ஹரி தெரிவித்திருக்கிறார். அதாவது ஹரி 17 வயதாக இருந்தபோது கஞ்சா புகைத்து கொண்டிருப்பதை பார்த்த இளவரசர் சார்லஸ் மறுவாழ்வு மையத்திற்கு ஹரியை அனுப்பியது தெரியவந்துள்ளது. எனினும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை ஹரி பலதடவை கஞ்சா புகைத்தது தெரியவந்தாலும் அவர் அதற்கு அடிமை ஆகவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.