நெல்லையில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தருவையில் கட்டிடத் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் நடைபெற்று வந்த கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வேலை முடிந்ததும் அதற்காக பயன்படுத்திய சாமான்களை மாடியில் வைத்து கழுவும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் அலுமினிய கம்பியை கழுவி விட்டு மேலே தூக்கியதால் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின் கம்பியின் மீது பட்டது.
இதில் ராஜ்குமாரின் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.