Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு…. திடீரென்று களத்திலிறங்கிய சபாநாயகர்…. நெல்லையில் நடந்த நிகழ்ச்சி….!!

திருநெல்வேலியிலிருக்கும் அரசு மருத்துவமனையை சபாநாயகரான அப்பாவு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சபாநாயகரான அப்பாவு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

அப்போது அவர் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் தங்கியிருக்கும் வார்டிற்குள் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டார். அதன்பின் அவர் மருத்துவமனை வளாகத்திற்குள் மூலிகை மரக்கன்றையும் நட்டார். இதனையடுத்து அவர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இதில் ஏராளமான முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |