டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தினால் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பைக்காரா பகுதியில் பசுமலை துணை மின் நிலையம் அமைந்துள்ளது இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதான் வைகை ஆற்றின் தென் பகுதி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில் திடீரென மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் மதுரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.