பீகார் மாநிலத்தில் ஐசியு வார்டில் இருந்த கொரோனா நோயாளியை ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகின்றது. இது போன்ற சூழ்நிலைகளிலும் கொரோனா பாதித்த நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதேபோன்று பீகார் மாநிலத்தில் 45 வயது மிக்க ஒரு பெண் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்பொழுது யாரும் இல்லாத சமயம் பார்த்து அங்கு வேலை பார்த்த மூன்று ஊழியர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் மகள் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை கூறியபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளனர். இருப்பினும் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.