நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் சாலை முதலாவது குறுக்கு தெரு, சந்தைபேட்டை புதூர், கணேசபுரம் புதுத்தெரு, பத்ரகாளியம்மன் தெரு, பெரியப்பட்டி ரோடு, இ.பி.காலனி,குழந்தான் தெரு, சின்னமுதலைப்பட்டி என 7 தெருக்களிலும் நகராட்சி அதிகாரிகள் தகரம் கொண்டு அடைத்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.