கஞ்சா விற்ற குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உமச்சிகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கீழமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, செல்வம், ராணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.