நடிகை ரம்யா பாண்டியன் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் சமுத்திரகனியின் ஆண்தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ரம்யா பாண்டியன் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
First dose done ..please get vaccinated …lets stay home and stay safe pic.twitter.com/lFvvOSyOKU
— SriRamya Paandiyan (@iamramyapandian) May 21, 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘முதல் டோஸ் முடிந்தது. தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.