தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை வகுப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இதனால் தெரு விலங்குகள் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர்.
தெருவில் வாழும் பல விலங்குகள் உணவின்மை காரணமாக உயிரிழந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக விலங்குகளுக்கு உணவு அளிக்க செயல்திட்டங்களை வழங்குவதற்கான குழு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. மேலும் இது குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.