லண்டனில் தகாத தொழில் செய்து வந்த பெண் ஒருவரிடம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற வாலிபருக்கு சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி ஹேர்ட்போர்ட்ஷிரே-ல் வசித்து வரும் முகமது ரஷிக் ( 19 ) என்னும் வாலிபர் லண்டனில் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்டு நள்ளிரவு 11.50 மணிக்கு கையில் பெரிய கத்தியுடன் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட முயற்சி செய்த போது அங்கிருந்த ஆண் ஒருவர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனால் ரஷிக் பயத்தில் அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ரஷிக்கின் செல்போனை தடயமாக கொண்டு அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர் அவருக்கு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு ஐந்து வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.