இ பதிவு அனுமதி இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனால் மாவட்டத்துக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ பதிவு அனுமதி மிக அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு யாரேனும் இ பதிவு அனுமதி இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் இதுவரை இ பதிவு இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.