சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் ஆட்டோ ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் ஆம்புலன்ஸ்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் மருத்துவமனைகள் அனைத்திலும் படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.
இதுபோன்ற சூழ்நிலையில் சென்னை மக்களுக்கு உதவும் வகையில் கடமை, கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்படும் கொரோனா நோயாளிகள் இந்த ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகின்றது.