விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக வாகன உதிரிபாக கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாடானை பகுதியில் உள்ள தினையத்தூர் கிராமத்தில் அரசு விதித்த விதி முறைகளை மீறி காலை 10 மணிக்கு மேல் செயல்பட்ட மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு தாசில்தார் செந்தில் வேல்முருகன் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.