இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 10 முதல் மே 24-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.