Categories
தேசிய செய்திகள்

60 குரங்குகளுக்கு கொரோனா உறுதி…. 14 நாட்கள் தனிமை…. டெல்லி வனத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தீவிர மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றபடி லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஜெய்ப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் நடமாடிய 60 குரங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து 14 நாட்களுக்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே விடுவிக்கப்படும் என்று அம்மாநில வனத்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |