நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மே-22 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.