கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை தேடி உள்ளார். ஆனால் அந்தக் கிணற்றுக்குள் 50 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் இருந்ததால் சபாபதி கிடைக்கவில்லை.
இதனால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றிற்குள் விழுந்த சபாபதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் சபாபதியை எளிதில் கண்டுபிடிக்க இயவில்லை. இதனையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றிய பிறகு சபாபதியின் சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சபாபதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.