திருவாரூரில் மணல் கடத்தல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மற்றும் மது விற்பனை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியின் உத்தரவின்படி, காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நீடாமங்கலம் பகுதியில் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்ததால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் தலைமறைவாக இருக்கின்றனர்.
இதேபோன்று கள்ளச்சந்தை பகுதியிலும் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த மர்மநபர்கள் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்து தலைமறைவாக இருக்கின்றனர். எனவே மணல் கடத்தல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.