புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சரக்கு வாகனத்தில் மணல் கடித்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தனவாசல் குளத்து பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் மணல் கடத்தியதற்காக வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.