நடிகை ராஷ்மிகா மந்தனா ரீமேக் மூவியில் நடிக்க மறுத்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ எனும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, தான் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கில் புஷ்பா எனும் திரைப்படத்திலும், ஹிந்தியில் மிஷன் மஜ்னு எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.