Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகளை காப்பாற்ற சென்ற போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தையும்,மகளும் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு‌ சாய் பிரநித்தா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் தனது மகளான சாய் பிரநித்தாவை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயலில் உள்ள திறந்தவெளி விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக சாய் பிரநித்தா தவறி விழுந்து விட்டார். இதனைப் பார்த்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து தனது மகளை காப்பாற்ற வேண்டும் என நினைத்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால் அவரால் தனது மகளை காப்பாற்ற இயலாமல் முருகனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் வந்து கிணற்றை பார்த்த போது தந்தையும் மகளும் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர். இதனை அடுத்து அரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி இரண்டு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இருவர்களின் உடலை தீயணைப்பு துறையினர் மேலே கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு தந்தையும் மகளும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |