இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே வழி ஆகும். ஆனால் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே தயக்கமும், அச்சமும் இருந்து வருகிறது. எனவே தடுப்பூசி குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையூட்டும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் ஹரீஷ் கல்யாண், இன்று தனியார் மருத்துவமனையில் முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவை ஒழிக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.