சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மூதாட்டி விட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட நிலை காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அரூர் பகுதியில் காட்டூர் ஏ.வெளாம்பட்டி, ஆண்டிபட்டி, கொளகம்பட்டி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
இதனை தொடர்ந்து மழையின் போது வீசிய பலத்த சூறைக்காற்றினால் கௌதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சின்னதாய் என்பவரது வீட்டின் சிமெண்ட் சீட் தூக்கி வீசப்பட்டு முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த சூறைக்காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. அதன்பின் மொரப்பூர் பகுதியில் இரவு நேரம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.