தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி தரவேண்டும் என்றும், நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க வேண்டும் என அதிமுக தரப்பிலும், 5 நாட்களுக்கு ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டும் என்றும் பாமக தரப்பிலும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.