குக் வித் கோமாளி-2 டைட்டில் வின்னர் கனி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும் பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் கலந்து கொண்டனர்.
நான் தடுப்பூசி போட்டுகிட்டேன்.. நீங்க?? #GetVaccinated pic.twitter.com/c1gDb0ELNX
— கனி(kani thiru) (@karthigathiru) May 21, 2021
சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும் இந்த சீசனில் கனி டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் தடுப்பூசி போட்டுகிட்டேன்.. நீங்க?’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.