கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகை ஷ்ருதிஹாசன் பதிவு செய்துள்ளார்.
தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான வக்கீல் சாப் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தமிழில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.
மேலும் கன்னடத்தில் சலார் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக போர் காலத்தில் செயல்படுவது போல செயல்பட வேண்டும்.மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.