Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

டவ்தே புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், நீலகிரி, புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 24, 25, 26 ல் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, குமரி, நெல்லையில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |