Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை…. அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்றை கட்டுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதுமாக மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்நிலையில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுனர்கள் பரிசீலனை செய்துள்ளனர். இதையடுத்து முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது. எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கு திங்கள் முதல் நீட்டிக்கலாம் என்பதனால் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் கடைகளை திறப்பதற்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |