நேற்று இரவு சீனாவில் எதிர்பாராதவிதமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள டாலிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று இரவு 7.18 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாலிக்கு வடமேற்கே சுமார் 28 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ?என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் உயிர் இழப்புகள் எதுவும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.