மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினருடன நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி உள்ளதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இயக்குனர் சந்தோஷ்குமார் சசிதரனின் கையாட்டம் என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 கலைஞர்கள் இமாசலப் பிரதேசம் சென்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சுற்றியுள்ள ஸ்ப்ளிடி பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது வந்த நிலையில், தர்மசாலா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் இருந்த சத்திரம் கிராமத்தை இணைக்கும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் படக்குழுவுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் தடைபட்ட நிலையில், கையில் இருக்கும் உணவுப் பொருட்களும் இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது என மஞ்சு வாரியர் தனது சகோதரர் அது மதுவாரியருக்கு அவசரகால செய்தி அனுப்பியுள்ளார்.
மேலும் இங்கு 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு சிக்கி தவிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரணிடம் உதவி கூறியதாகவும், ஹிமாச்சல முதலமைச்சர் ஜெய்ஸ்ரீராம் டாக்டரிடம் பேசி உதவி செய்வதாக அவர் உறுதி அளித்ததாகவும் மது வாரியர் கூறியுள்ளார். ஸ்ப்ளிட்டி பள்ளத்தாக்கில் 2000 சுற்றுலா பயணிகள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.