Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 4500 பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம்,அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது திங்கட்கிழமை காலை முதல் அமலுக்கு வருகிறது.

அதனால் வெளியூரில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக இன்றும் நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை ஆகிய முக்கிய நகரங்கள் இடையே 3000 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இன்றும் நாளையும் 1500 பேருந்துகள் இயக்கப்படும். இந்த அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |