வட்டி கடனுக்கான வட்டி உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கியிடம் வருவாயிலிருந்து அனைத்து விதமான செலவினமும் போக மீதி இருப்பை ரிசர்வ் வங்கி உதவி தொகையாக வைத்துள்ளது. அந்த உபரித் தொகை ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. அப்போது ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தற்போதும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையான ரூ.99.122கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு நிதி வழங்கி வருவதை தொடர்ந்து, இந்த ஆண்டும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்தவும், அரசின் செலவுகளை சமாளிக்கும், மத்திய அரசிடம் நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.