Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்டதால்…. சட்டென கவிழ்ந்த லாரி… தர்மபுரியில் பரபரப்பு…!!

லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.செட்டி அள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோளாறில் இருந்து திருச்சிக்கு காலிபிளவர் காய்கறி பாரதத்தை சரக்கு லாரியில் ஏற்றி கொண்டு தர்மபுரி மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து லாரியானது பாலக்கோடு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது திடிரென லாரி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருபதற்காக லாரி ஓட்டுநர் சடன் பிரேக் போட்டுள்ளார்.

இதனால் லாரி  நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் காலிப்ளவர் மூட்டைகள் லாரியில் இருந்து கீழே விழுந்து ரோட்டில் சிதறி கிடந்தன. இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். மேலும் அதிஷ்டவசமாக எந்த வித காயமுமின்றி ஓட்டுநர் உயிர் தப்பிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |