சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த பெல்ஜியத்தை சேர்ந்த மாணவி, காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவி Sarah Kassandra (21). இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள Valais என்ற மண்டலத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவில் Sarahவிற்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் விடுதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால் தற்போது வரை அவர் விடுதிக்கு திரும்பாததால் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Sarah, தன் செல்போன் மற்றும் கார் போன்ற எந்த உடைமைகளையும் எடுத்து செல்லவில்லை என்று கூறுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, Sarahவின் குளியலறையில் ரத்தக்கறை இருந்துள்ளது. எனவே இச்சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் கூறியுள்ளதாவது, தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விபரீதம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.