ராமநாதபுரத்தில் உதவி செய்வதாக கூறி பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கண்ணன்(41) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் அவரது மனைவி கார்த்திகயானி(31) மற்றும் 1 வயது குழந்தை ஹன்சிகா 3 பெரும் தென்றல் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் உதவி செய்வதாக கூறி கண்ணன் அவரது கைப்பையில் வைத்திருந்த 50,000 பணம், 4 கிராம் சங்கிலி, 2 கிராம் மோதிரம் மற்றும் 2 வெள்ளி கொலுசுகளையும் திருடி சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து கண்ணன் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.