உத்திரபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
உத்திரபிரேதச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றனர். இந்நிலையில் போபாலில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அறியாது போபால் அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்த சிவா, காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர்.அப்போது திடீரென 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியதால் அவர்கள் நின்ற பாறை சுற்றிலும் வெள்ளக்காடாக மாறியது.
இருவரும் அச்சத்தில் கூச்சலிடவே கிராம மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஏணியை அவர்கள் நின்ற இடத்தில் போட்டு குறுக்கே பாலம் அமைத்து இருவரையும் மீட்டனர். தீயணைப்பு துறையினரின் இந்த துணிச்சல் செயல் பலரிடம் பாராட்டை பெற்று தந்தது.