Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது… ஆதாரில் முகவரியை மாற்ற…. இதை செய்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது.

இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும் போது ஆதரிலுள்ள முகவரியையும் மாற்ற வேண்டும். இதற்காக வேறு எங்கும் அழிய வேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Address Requestயை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Update Address  என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் ஆதார் எண்ணை உள்ளிட்டு Login செய்து விவரங்களை நிரப்ப வேண்டும். இதை செய்வதன் மூலமாக சில நாட்களுக்கு பிறகு உங்கள் ஆதார் முகவரி மாறி விடும்.

Categories

Tech |