எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 132 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ஒரு விசைப்படகில் சென்ற உரிமையாளர் மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கோட்டை பட்டினத்தில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இரவு 11.31 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எந்த எச்சரிக்கையும் அளிக்காமல் விசைப்படகையும், 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நடைபெற்ற விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.