பாகிஸ்தானில் உள்ள மாவட்டம் ஒன்றில் கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிசூடு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள வசீரிஸ்தான் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இதனிடையே வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடந்த ஆண்டில் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில் இது குடும்பத்தினருக்கு இடையே ஏற்படும் தாக்குதல்கள் என்றும் அதனால் புகார்கள் கொடுக்க மறுக்கின்றனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.