Categories
தேசிய செய்திகள்

வரதட்சணைக்காக… இப்படியெல்லாமா செய்வாங்க… மனைவின் அந்தரங்க வீடியோவை வைத்து கணவன் செய்த காரியம்..!!!

மனைவியின் அந்தரங்க போட்டோவை எடுத்து கணவனே அதை வைத்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து திருமணமான முதலே கணவரின் வீட்டில் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணின் பெட்ரூமில் அவருக்கு தெரியாமல் கேமராவை ஒளித்து வைத்து அவரது அந்தரங்க படங்களையும் எடுத்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் கணவன் வீட்டாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என்று கணவன் மிரட்டியுள்ளார். அதையும் அப்பெண் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |