மெக்சிகோவில் கொலை வழக்கில் கைதான நபர் விசாரணையில் கூறிய தகவல்கள் அதிர வைத்துள்ளது.
மெக்சிகோவில் Andrés Mendoza(72) என்ற நபர் காவல்துறை அதிகாரியின் மனைவியை கொலை செய்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதாவது தற்போது வரை அவர் 5 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
அதில் Reyna González என்ற பெண் காணாமல் போன வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அந்தப் பெண்ணின் சடலம் மற்றும் மேலும் 9 பெண்களுடைய சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில், தன்னுடன் அறிமுகமான பெண்களையே கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அதில் ஒரு பெண் மிகுந்த அழகுடன் இருந்தார். எனவே அவரின் முகத்தை சிதைத்துவிட்டேன் என்று கூறி அதிரவைத்திருக்கிறார். எனவே இவர் 20 வருடங்களில் சுமார் 30 பெண்களை கொலை செய்திருக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. மேலும் அவர் கொலை செய்த பெண்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.